
பருத்திவீரன் கார்த்தி - காஜல் அகர்வால் ஜோடி நடித்திருக்கும் புதிய படம் நான் மகான் அல்ல. டைரக்டர் சுசீந்திரன் இயக்கியுள்ளார். ஞானவேல் தயாரித்துள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. டைரக்டர்கள் லிங்குசாமி, ஹரி, விஷ்ணுவர்தன், தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினார்கள். நிகழ்ச்சியில் பேசிய பலரும் கார்த்தியின் நடிப்பு பற்றி பாராட்டினார்கள். அப்போது பேசிய கார்த்தி, “நான் மகான் அல்ல” படம் சிறப்பாக வந்துள்ளது. “பையாபட வெற்றிக்கு பின் யுவன் மீண்டும் இந்த படத்திலும் இசையமைத்துள்ளார். பையாவில் இடம் பெற்ற அடடா மழைடா அடை மழைடா பாடலை போகு மிடமெல்லாம் பாடி பெருமை படுத்துகிறார்கள். அது போல் இந்த படத்திலும் எல்லா பாடல்களும் நன்றாக வந்துள்ளன. சுசீந்திரன் இயக்கியுள்ளார். சென்னையில் உள்ள ஒரு நடுத்தர குடும்பம் சந்திக்கும் பிரச்சினைகளே கதை. காஜல் அகர்வால் நாயகியாக நடித்துள்ளார், என்றார். காதல் கிசுகிசு குறித்து அவர் பேசுகையில், நான் காதலிப்பதாக சொல்கிறார்கள். நிச்சயமாக நான் காதல் திருமணம் செய்ய மாட்டேன். பெற்றோர் பார்க்கும் பெண்ணைத்தான் திருமணம் செய்வேன், என்று கூறினார்.
No comments:
Post a Comment